COVID-19 Outbreak – Updating details of Sri Lankans in the UK
ශ්රී ලංකාවේ COVID-19 වෛරසය පැතිරීම පාලනය කිරීම සඳහා 2020 මාර්තු 18 වන දින කොළඹ ජාත්යන්තර ගුවන්තොටුපළ තාවකාලිකව වසා දැමීමටත්, ශ්රී ලාංකිකයන් ඇතුළු සියලුම මගීන්ගේ පැමිණීම තාවකාලිකව අත්හිටුවීමටත් තීරණය කිරීමෙන් අනතුරුව ශ්රී ලංකාවට පෙරලා යාමේ හැකියාව සම්බන්ධයෙන් විමසීම් විශාල ප්රමාණයක් එක්සත් රාජධානියේ අධ්යාපන කටයුතු වල නිරතව සිටින ශ්රී ලාංකික සිසුන්ගෙන්, එක්සත් රාජධානියේ සංචාරයේ යෙදී සිටින ශ්රී ලාංකිකයන්ගෙන් සහ වෙනත් අයවලුන්ගෙන් මෙම මහ කොමසාරිස් කාර්යාලයට මේ දිනවල නිතිපතා ලැබේ.
ඔබ දන්නා පරිදි, තම මව්බිමට ආපසු යාමට අපේක්ෂා කරන විදේශගත ශ්රී ලාංකිකයන් ගෙන් COVID – 19 වෛරසය පැතිරීමේ අවදානම අවම වන තුරු ඔවුන් දැන් සිටින ස්ථානවලම ආරක්ෂිතව රැඳී සිටින ලෙස ශ්රී ලංකා රජය ඉල්ලා සිටියේය. කොළඹ ජාත්යන්තර ගුවන්තොටුපළ තාවකාලිකව වසා දැමීම, වාණිජ ගුවන් ගමන් තාවකාලිකව අත්හිටුවීම සහ ශ්රී ලංකාවට මගීන් පැමිණීම තාවකාලිකව අත්හිටුවීම තවදුරටත් ක්රියාත්මක අතර සීමිත ශ්රී ලාංකිකයන් ප්රමාණයක් නැවත ශ්රී ලංකාවට ගෙන්වා ගැනීම සිදු කර ඇත. මේ කාර්යයේදී ශ්රී ලංකා රජය රටෙහි පවතින සීමිත නිරෝධායන පහසුකම් සැලකිල්ලට ගෙන විදේශගත ශ්රී ලාංකිකයින් අතර වඩාත් අවදානමට ලක්විය හැකි කාණ්ඩ හඳුනාගෙන තිබේ.
එබැවින්, කොළඹ ජාත්යන්තර ගුවන්තොටුපළ විවෘත කර නිත්ය වාණිජ ගුවන් ගමන් නැවත ආරම්භ වන තුරු ශ්රී ලංකාවට පෙරලා යාමට අපේක්ෂා කරන එක්සත් රාජධානියේ සිටින ශ්රී ලාංකිකයන්ගෙන් තමන් සිටින ස්ථානවලම තවදුරටත් ආරක්ෂිතව රැඳී සිටින ලෙස නැවත වරක් කාරුණිකව ඉල්ලා සිටිමු.
යම් හෙයකින් වාණිජ ගුවන් ගමන් නැවත ආරම්භ කිරීමට පෙර හදිසි ගුවන් ගමන් ක්රියාත්මක වුවහොත් ශ්රී ලංකාවට ආපසු යාමට අපේක්ෂා කරන එක්සත් රාජධානියේ සිටින ශ්රී ලාංකිකයින්ගේ සංඛ්යාව තක්සේරු කිරීම සඳහා අපගේ වෙබ් අඩවියේ ඇති http://www.srilankahc.uk/survey/ සමීක්ෂණය සම්පූර්ණ කරන ලෙස ඉල්ලා සිටිමු. එසේම මේ කාරණය හා සම්බන්ධ විමසීම් consular.london@mfa.gov.lk යන ලිපිනය හරහා විද්යුත් තැපෑල මගින් කරන ලෙසද ඉල්ලා සිටිමු.
இங்கிலாந்தில் உள்ள இலங்கை மாணவர்களிடமிருந்தும், இங்கிலாந்திற்கு குறுகிய கால வருகையில் வந்து இங்கு தங்கியிருக்கும் இலங்கையர்களிடமிருந்தும், இலங்கைக்கு மீண்டும் திரும்பிப் பயணம் செய்வதற்கான சாத்தியக்கூறு தொடர்பாக விளக்கம்கோரி அதிகமான கேள்விகளைப் பெறுகிறோம்.
இது தொடர்ப்பில், COVID -19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை அரசாங்கம் 2020 மார்ச் 18 அன்று முதல் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை தற்காலிகமாக மூடவும், இலங்கை உட்பட அனைத்து பயணிகளின் வருகையையும் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்தது.
நீங்கள் அறிந்த வகையில் COVID – 19 வைரஸ் அபாயத்தைக் குறைக்கும் வரை, தாய்நாட்டிற்குத் திரும்ப விரும்பும் வெளிநாட்டிலுள்ள இலங்கை பிரஜைகள் அனைவரையும் அவர்கள் இப்போது இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்குமாறு இலங்கை அரசு கேட்டுக்கொள்கிறது.
கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை தற்காலிகமாக மூடுதலும், இலங்கைக்கு பயணிகள் வருவதை நிறுத்தி வைப்பதும் தொடர்கிறது, ஆயினும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திருப்பி அழைக்கும் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த நோக்கத்திற்காக, நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ள நிலையில் , புலம்பெயர்ந்து வெளி நாடுகளில் வாழும் இலங்கையர்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வகையினர்களை இலங்கை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
எனவே, கொழும்பு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கமான வணிக விமானங்களின் போக்கு வரத்து தொடங்கும் வரை, இலங்கைக்குத் திரும்ப விரும்புகின்ற இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளை, அவர்கள் தற்போது தங்கியிருக்கும் இடத்திலேயே, பாதுகாப்பாக இருக்குமாறு மீண்டும் கேட்டுக் கொள்ள விரும்புகிறோம்.
சில சமயங்களில் அவசர விமானங்கள் செயற்படுத்தப் படும் போது, இலங்கைக்குத் திரும்ப விரும்பும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்காக, எங்கள் வலைத்தளத்தில் பின்வரும் இணைப்பில் http://www.srilankahc.uk/survey/ மதிப்பீடொன்று செய்யப்படுகிறது. எனவே அந்த இணைப்பை பூர்த்தி செய்து கொள்ளுமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறோம். இந்த விடயம் தொடர்ப்பில் உங்களுக்கு ஏதேனும் விசாரணைகள் இருந்தால், தயவுசெய்து இது போன்ற விசாரணைகளை consular.london@mfa.gov.lk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பவும்.
Following the temporarily closure of the Colombo International Airport on 18 March 2020 and temporarily suspension of the arrival of all passengers including Sri Lankans in order to control the spread of COVID-19 in Sri Lanka, we receive a large number of queries from Sri Lankan students in the UK, Sri Lankans who are on short visits to the UK and others with regard to the possibility of travelling to Sri Lanka.
As you are aware, the Government of Sri Lanka urged Sri Lankan expatriates who wish to return to their Motherland to safely remain where they are now until the risk of COVID – 19 virus is minimized. The temporary closure of the Colombo International Airport, suspension of arrival of commercial flights and the suspension of arrival of passengers to Sri Lanka continue despite the limited repatriations that have been carried out. For this purpose, the Government of Sri Lanka identified the most vulnerable categories of Overseas Sri Lankans, in the face of limited availability of quarantine facilities in the country.
Therefore, we wish to once again request Sri Lankan expatriates in the UK who wish to return to Sri Lanka, to remain where they are, in safety, until the Colombo International Airport re-opens and regular commercial flights resume.
In order to assess the number of Sri Lankan expatriates in the UK who wish to return to Sri Lanka, in case of operation of emergency flights, we kindly request that the survey on our website at the link http://www.srilankahc.uk/survey/ be completed. If you have any queries on this matter, please make such inquiries by email to the address consular.london@mfa.gov.lk.